மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் தாயும் மகளும் காயம்

வெலிகம பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் தாயும் மகளும் காயமடைந்துள்ளனர்.
ஹெட்டிவீதியில் உள்ள இரண்டாவது ரயில் கடவையில் இன்று (01) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த தாயும் மகளும் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெலிகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.