மீனவ விவகாரம் – இந்திய அரசிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

மீனவ விவகாரம் – இந்திய அரசிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு மக்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்குமாறு இந்திய அரசிடம், சபைத் தலைவர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு இந்திய அரசிடம் கோரினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

”இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்பில் சட்டத்தின் படி செயற்படுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

இந்தவிடயம் தொடர்பில் தமிழக அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பல உதவிகளை செய்தாலும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவ முன்வராவிடின் ஏனையவற்றுக்கு உண்மையில் உதவுமா என்ற கேள்வி எழுகிறது. வடக்கு மக்களின் ஒரே வாழ்வாதாரம் அழிக்கப்படக் கூடாது” என்றார்.

Share This