மியன்மார் நிலநடுக்கம் – 2700 பேர் பலி , உணவு மற்றும் நீர் விநியோகம் குறைந்து வருவதால் சிரமத்தில் மக்கள்

மியன்மார் நிலநடுக்கம் – 2700 பேர் பலி , உணவு மற்றும் நீர் விநியோகம் குறைந்து வருவதால் சிரமத்தில் மக்கள்

மியன்மார் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2700 ஐ கடந்துள்ளது.

மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவானது.

மியான்மாரின் ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தென்கிழக்கு ஆசிய நாட்டை உலுக்கியது.

தாய்லாந்திலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் கட்டிடங்கள் பல இடிந்து வீழ்ந்ததில் 4,521 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமற்போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மண்டலே நகரத்தில் வசிப்பவர்கள், உணவு மற்றும் நீர் விநியோகம் குறைந்து வருவதால் பெரும்
சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This