மற்றவர்களை ஈர்க்கும் ஆறாம் விரல்…வரக் காரணம் என்ன?

மனிதர்களுள் அவர்களது உறுப்புக்களின் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு கையில் ஆறாவதாக ஒரு விரல் இருக்கும்.
இதனை ஒரு சிலர் அதிர்ஷ்டம் எனக் கூறுவார்கள். இன்னும் சிலர் துரதிர்ஷ்டம் எனக் கூறுவார்கள்.
ஆனால், பெரும்பாலானோருக்கு எதனால் இந்த ஆறாம் விரல் இருக்கிறது என்றே தெரியாது. அதுகுறித்து இப்போது பார்ப்போம்.
ஐந்து விரல்களுக்கு மேல் விரல்கள் இருப்பின் அதனை polydactyly எனக் கூறுவார்கள். பொதுவாக இந்த ஆறாம் விரல் சுண்டு விரல் அல்லது கட்டை விரலுக்கு அருகில் தான் வளரும்.
ஒரு சிலருக்கு இந்த ஆறாம் விரல் முழுவதுமாக வளர்ந்திருக்கும். ஏனைய விரல்களைப் போல் இதனையும் மடக்கி நிமிர்த்த முடியும்.
சிலரு்கு இந்த விரல் வளர்ச்சியில்லாமல் இருக்கும். இது ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்காமல் இருக்கும்.
இவ்வாறு ஆறாம் விரல் வளர்வதற்கு மரபணுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
வீட்டில் தாத்தா, பாட்டி,தாய், தந்தை யாருக்கேனும் ஆறு விரல்கள் இருந்தால் பிள்ளைகளுக்கும் ஆறு விரல் இருக்கக்கூடும்.
இல்லையெனில் பிறக்கும்போதே ஒரு சில குழந்தைகளுக்கு ஆறாம் விரல் இருக்கலாம்.
ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இவ்வாறு நிகழும். இந்த ஆறாம் விரல் வேண்டாம் என்று நினைத்தால் அதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம்.