
மன்னார் துறைமுகத்தை நிர்மாணிக்க விலைமனு கோரல்
மன்னார் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார் துறைமுகத்தின் முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கு இணையாக மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கு இலங்கை நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES இலங்கை
