மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஹொக்கி போட்டி இடைநிறுத்தம்

கண்டி – பேராதனை பல்கலைக்கழக ஹொக்கி மைதானத்தில் நடைபெற்ற மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான
ஹொக்கி போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வித்யார்த்த கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான, 19 வயதுக்குப்பட்டோருக்கான ஹொக்கி
இறுதிப் போட்டியே இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இரு கல்லூரிகளையும் சேர்ந்த அணியினரிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த இருவர் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, ஹொக்கி போட்டி இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.