மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

இரு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பொலனறுவை மாவட்டம் உட்பட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் கவுதுல்ல குளத்தின் 02 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மதுரு ஓயா மற்றும் குடா ஓயா ஆகியவை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
மழை காரணமாக பல பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.