நீர்கொழும்பில் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பில் சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை வேனில் ஏற்றிச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொப்பரா சந்தியில் நேற்று (01.03) சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
போதைப்பொருட்கள் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.