நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை ஒருவர் பலி

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இறந்தவர் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில்,
அவரைக் காப்பாற்ற முயன்ற போதும், அது தோல்வியில் முடிந்துள்ளது.
உயிரிழந்தவர் 38 வயதான ரஷ்யப் பிரஜை ஆவார்
உயிரிழந்தவரின் சடலம் நேற்றிரவு பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.