நபர் ஒருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

நபர் ஒருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

நபர் ஒருவரை கடத்திச் சென்று 8,478,000 ரூபா பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் செல்வதற்காக குறித்த நபர் விமான நிலையத்திற்கு இன்று காலை வருகைத் தந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This