தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது.

இதன்படி, 05 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது.

ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரத்தில் 27,500 மெற்றிக் தொன் உரத்தை பயன்படுத்தி 56,000 மெற்றிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த கலப்பு உரத்தை 4,000 ரூபா மானிய விலையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

50 கிலோகிராம் கலப்பு உர மூடையொன்றின் தற்போதைய சந்தை விலை 9,500 ரூபாவாகும்.

நாடளாவிய ரீதியில் தெங்குச் செய்கையாளர்களுக்காக மானிய விலையில் விநியோகிக்கப்படவுள்ள கலப்பு உரத்தை இம்மாத இறுதியில் வழங்க திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Share This