தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த 03.12.2024 அன்று அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியால்
பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.

இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். பாரியளவான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிம் யோங்-ஹியூன் பதவி விலகினார்.

இந்நிலையில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தில் கிம் யோங்-ஹியூன் முக்கிய பங்கு வகித்துள்ளதாக குற்றம் சுமத்திப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு சற்று நேரத்தின் முன்னர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Share This