ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பயணத் தடை நீக்கப்பட்டது.
மதங்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அவரது பிரச்சாரக் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டதைத் தொடர்ந்து
ஜெரோம் பெர்னாண்டோ 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார்.
கடந்த வருடம் மதப் போதகர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.