சுற்றுலாப் பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு விளக்கமறியல்

சுற்றுலாப் பயணியிடம் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.