சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை  20 இலட்சத்தைக் கடந்தது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்றுடன் 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.

பிரித்தானியாவின் இலண்டன் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் இன்று வருகை தந்த தம்பதியினருடன், இலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, இன்று வருகை தந்த வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர், இலங்கையில் இரண்டு வாரங்கள் தங்கியிருக்க உள்ளனர்.

இந்தத் தம்பதியினரை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் நிர்வாக மற்றும் மனிதவளப் பணிப்பாளர் அனூஷா தமயந்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு சென்றிருந்தது.

 

Share This