சுகாதார அமைச்சர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய சுகாதார, போஷாக்கு மற்றும் மக்கள் தொகை முகாமையாளர் கலாநிதி ஃபெங் சாவோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையின் இலவச சுகாதார சேவையின் தற்போதைய நிலை மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்காக இதுவரை உலக வங்கி வழங்கிய பங்களிப்புகள், ஆதரவு மற்றும் மானியங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையில் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்துவதன் மூலம் தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை மக்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, உலக வங்கியின் ஆசிய பிராந்திய சுகாதார, போஷாக்கு மற்றும் மக்கள்தொகை முகாமையாளர் கலாநிதி ஃபெங் சாவோ உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு அறிவித்தார்.