சீன அச்சுறுத்தல் காரணமாக ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் நிறுத்தம்

பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் சீன அச்சுறுத்தல்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன தேசிய பாதுகாப்பு சேவைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
சீனாவிலிருந்து பல்கலைக்கழக வலைத்தளங்களுக்கு அணுகல் தடுக்கப்பட்டதால், சீன மாணவர்களை சேர்க்கும் திறன் பாதிக்கப்பட்டது.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பல தடைகளை எதிர்கொண்ட பிறகு, பல்கலைக்கழகம் இறுதியில் ஆராய்ச்சியை வெளியிடாமலிருக்க தீர்மானித்தது.
பல்கலைக்கழகம், சீன மாணவர் வருமானத்தை பாதுகாக்க கல்வி சுதந்திரத்தை வர்த்தகப்படுத்த வெளிநாட்டு உளவுத்துறையுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
