கோள்களின் அணிவகுப்பு – கொழும்புப் பல்கலைக்கழக்கத்தில் முகாம் ஏற்பாடு, அனைவரும் கலந்துக்கொள்ளலாம்

கோள்களின் அணிவகுப்பு – கொழும்புப் பல்கலைக்கழக்கத்தில் முகாம் ஏற்பாடு, அனைவரும் கலந்துக்கொள்ளலாம்

சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை இன்று பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை இவ்வாறு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வௌ்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்கள் வெற்றுக்கண்களால் அவதானிக்கக் கூடியவாறு பிரகாசமாக தென்படும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கியினுடாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக பேராசிரியர் கூறினார்.

இதேவேளை, வான் பற்றிய தகவல்களை அறிந்துள்கொள்வதற்காக கொழும்பு பல்கலைக்கழகம் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முகாம் இன்று மாலை 6:20 முதல் இரவு 8:00 மணி வரை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த நேரத்தில் வானம் தெளிவாக இல்லாவிட்டால் கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Share This