கழுதைகளை மாட்டிறைச்சியுடன் கலக்க முயன்ற இருவர் கைது

கற்பிட்டி கந்தகுளியிலிருந்து படல்கம பகுதிக்கு இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகள் ஏற்றின் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுரைச்சோலை பொலிஸார் நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கழுதைகளை மாட்டிறைச்சியுடன் கலந்து விற்பனை செய்யும் நோக்கில் கழுதைகளை கடத்தப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கந்தகுளி பகுதியில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.