கடலில் கவிழ்ந்த இலங்கைப் படகு – தமிழக மீனவர்கள் மீட்பு

கடலில் கவிழ்ந்த இலங்கைப் படகை மீட்டு இந்திய மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பெரியதலையைச் சேர்ந்த மீன்பிடி படகுகள் வெள்ளிக்கிழமை மாலை கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பெரியதலை கடற்கரையிலிருந்து சுமார் ஏழு கடல் மைல் தொலைவில் படகொன்று மிதப்பதைக் கண்டுள்ளனர்.
படகு இலங்கையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்த அவர்கள் படகை கரைக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த தமிழக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்தப் படகு இலங்கையின் கற்பிட்டியை சேர்ந்தது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்தப் படகு கடல் அலை காரணமாக இழுத்துச் செல்லப்பட்டதா, மீன்பிடி நடவடிக்கையின் போது கவிழ்ந்ததா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் படகு சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.