எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் விழும் அபாயம்

எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் விழும் அபாயம்

எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இராவணெல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாறைகள் உறுதியற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக நீடித்த தீ, பெரும் முயற்சியின் பின்னர் இன்று  காலை அணைக்கப்பட்டதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்துள்ளார்.

முப்படை மற்றும் வனப் பாதுகாப்புத் துறையினரின் ஒத்துழைப்புடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.

தீப்பரவல் காரணமாக இராவணெல்ல வனப்பகுதி பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவரேனும் தீ வைத்திருக்க கூடும் என சந்தேகிக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

Share This