இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை

காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காசா மீதான இரக்கமற்ற தாக்குதல் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக இஸ்தான்புல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.

இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இராணுவ மந்திரி காட்ஸ், இராணுவ தளபதி இயால் ஜமீர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை இறுதியில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிடியாணைக்கு ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.

இந்நிலையில் துருக்கியின் இந்த தீர்மானத்தைப் பல அரபு நாடுகள் வரவேற்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்த பிடியாணை குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share This