இடமாற்றத்தை மறுத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் பட்டியல், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பு

இடமாற்றத்தை மறுத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் பட்டியல், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பு

இடமாற்றத்தை மறுத்த 44 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் பட்டியலை பதில் பொலிஸ் மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.

முன்னதாக, பொலிஸ் ஆணைக்குழு இந்த மறுப்புகளை நிராகரித்ததுடன், சரியான காரணங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்த இடமாற்றங்களை நிராகரித்ததை நியாயப்படுத்தும் வகையில், பதில் பொலிஸ் மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறையான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் மேலும் பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share This