மாத்தளையில் மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் பலி

மாத்தளையில் மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் பலி

மாத்தளையில் மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

யட்டவத்த, வாலவெல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் நாவுல, ஓபல்கல பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வயலுக்கு மின்சாரம் இணைத்த வயலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரை மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This