பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம்

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதால் இந்தப் போராட்டம் நிறுத்தப்படாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் சசிக விஜேநாயக்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என தெரிவித்த போதிலும் அரசாங்கம் உறுதியான உத்தரவாதம் வழங்கும் வரை தொழில்சார் நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This