மரத்தில் கட்டிவைத்து இளைஞர் மீது தாக்குதல்!! சமூக ஊடகங்களின் வெளியான காணொளியால் உயிரை மாய்த்துகொண்ட சோகம்

தான் கட்டிவைத்து தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த குறித்த இளைஞர் நித்திரை கொண்டதால் இறங்க வேண்டிய இடத்தை தவறிட்டு பிரிதொரு இடத்தில் இறங்கியுள்ளார்.
எனினும், அந்த இளைஞனை திருடன் என்று நினைத்த ஊர் மக்கள் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
அவரை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ராமச்சந்திரன் புவனேஸ்வரன் என்கிற முரளி (34), புஸ்ஸல்லாவ – ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்தவர்.
விசாரணையில் அவரது பெற்றோர் இறந்துவிட்டதாகவும், அவரது ஒரே சகோதரி வேறொரு பகுதியில் வசித்து வருவதாகவும் தெரியவந்தது.
ரொத்ஸ்சைல்ட் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் பேருந்தில் தூங்கி குறித்த இளைஞர் அதிகாலை 2.00 மணியளவில் ரம்பொட பகுதியில் இறங்கியுள்ளார்.
இதனையடுத்து ரம்பொட பகுதியில் வசிக்கும் உறவினரைத் தேடிச் செல்ல முடிவு செய்திருந்தார், எனினும், துரதிர்ஷ்டவசமாக, அவர் வழி தவறிவிட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில். உதவி கோரி ஒரு வீட்டின் கதவைத் தட்டியபோது, திருடன் என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர். இதனால் ஒன்று கூடிய பொது மக்கள் இளைஞர் தாக்கியுள்ளனர்.
மேலும், அவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியதுடன், கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனினும், பொலிஸ் விசாாரணையில் அந்த இளைஞர் நிரபராதி என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞர் பொலிஸ் பிணையில் விடுவித்து, வைத்திய பரிசோதனையின் பின்னர் ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இருப்பினும், அவரைத் தாக்கியவர்கள் சம்பவத்தின் காணொளி காட்சியை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாகவும், இதனை பார்த்த இளைஞர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.