உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து ஹவேலிய பகுதியில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.

ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This