யாழில் கோல் கம்பம் வீழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு

யாழில் கோல் கம்பம் வீழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 29) என்ற
இளைஞர் சிகிசை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This