தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தமிழக வெற்றிக் கழக்த் தலைவர் விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த கடிதத்தில், நான் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி கேட்டு அதிகளவில் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதனால், என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. எனவே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என உருக்கமாக எழுதி உள்ளார். மேலும், இது என்னுடைய மரண வாக்குமூலம் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.