சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (3) காலை முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் அவர் வெளியேறியுள்ளார்.
கதிர்காமத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட அவர், இன்று காலை 10 மணியளவில் அங்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.