பிரதமர் மோடிக்கு ஆசிவேண்டி சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நுவரெலியா, சீதாளிய சீதை அம்மன் ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் ஆலய நிர்வாக குழு உறுப்பினர்களும் இணைந்து இதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.