மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!! நடுவராக இலங்கையின் மிச்செல் பெரேரா

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையே இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
52 ஆண்டுகால மகளிர் உலகக் கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா அணிகள் இல்லாமல் இறுதிப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை.
இந்தியா இதற்கு முன்பு 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும், வரலாற்றில் இந்த முறை தென்னாப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கையின் மிச்செல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த ஆண்டு மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண முதல் அரையிறுதிப் போட்டியின் போட்டி நடுவராக இருந்தார், ஆனால் இறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மிச்செல் பெரேரா, 2022 ஆம் ஆண்டில் வனேசா டி சில்வாவுடன் சர்வதேச நடுவர்கள் குழுவில் இணைந்தார்.
இணைந்த மூன்று ஆண்டுகளுக்குள் அவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் நடுவர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
