தலைமைப் பதவியில் ரோஹித் நீடிப்பாரா?
இந்த ஆண்டு இறுதியில் பகுதியில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக செயற்பட ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் என்பதை பிசிசிஐ தெரிவுசெய்யாவிட்டால் ரோஹித் சர்மா அணியின் தலைவராக தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மும்பையில் நேற்று சனிக்கிழமை நடந்த கூட்டத்திலும் சர்மா பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஒரு நாள் போட்டிகளின் எதிர்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டு ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பின்னர் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவர் குறித்து முடிவெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு ரோஹித், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்த ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
பும்ரா புதிய தலைவராக தெரிவுசெய்யப்படுவாரா?
இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியமிப்பது குறித்து நேற்றை கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், இந்திய கிரிக்கெட் பேரவை உறுப்பினர்கள், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா உட்பட அனைவரும் இது குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால தலைமைப் பதவிக்கு பும்ரா பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது தனது பணிச்சுமையை நிர்வகிக்கும் அவரது திறன் குறித்கும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் போது, ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவங்களிலும் இந்தியாவை சில முறை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.