சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்?

ஐபில் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் செயற்பட்டுவரும் நிலையில், முதுகு காயத்தால் அவர் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஐபிஎல் 2026 தொடருக்காக எப்போது அணியில் இணைவார் என்பதும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பட் கம்மின்ஸுக்குப் பதிலாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் பல போட்டிகளில் பட் கம்மின்ஸ் பங்கேற்றிருக்கவில்லை. மேலும், 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்தும் விலகியிருந்தார்.

டைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையின் தகவல்படி, நடப்பு ஐபில் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தும் பொறுப்பு இஷான் கிஷனிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபிஷேக் சர்மா அணியின் துணை தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )