அமெரிக்கா மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்தால் ஈரானின் இலக்குகள் என்னவாக இருக்கும்?

அமெரிக்கா மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்தால் ஈரானின் இலக்குகள் என்னவாக இருக்கும்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ஈரானும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் அப்பகுதியில் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

டிரம்பின் எச்சரிக்கை 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேரக் கெடு விதித்ததாவது, ஹர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படாவிட்டால், ஈரானின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா குறிவைக்கும் என்றார்.

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல்களை ஐநது நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்ததுடன், ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

எனினும், ஈரானிய அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.

ஈரானின் கடுமையான நிலைப்பாடு

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்பட்டால், இஸ்ரேலிய மின் உற்பத்தி நிலையங்களும் குறிவைக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் மையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும், மேலும் எரிசக்தி, எண்ணெய் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை முறையான இலக்குகளாகக் கருதப்படும் என்றும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் திறைசேரியுடன் தொடர்புடைய அமைப்புகளும் குறிவைக்கப்படலாம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்தார்.

சாத்தியமான இலக்குகள் யாவை?

இஸ்ரேலில் உள்ள ஈரானின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள், குறிப்பாக டெல் அவிவ் மற்றும் அஷ்கெலோனுக்கு அருகிலுள்ளவை, சாத்தியமான இலக்குகளாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிவாயு வயல்கள், திரவ இயற்கை எரிவாயு (LNG) ஆலைகள் மற்றும் முக்கிய துறைமுகங்கள் உள்ளிட்ட எரிசக்தி உள்கட்டமைப்புகளும் குறிவைக்கப்படலாம்.

அறிக்கைகளின்படி, கத்தார் மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள தளங்கள் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

அமெரிக்க இராணுவத்தின் நிதிநிலை அறிக்கைக்கோ அல்லது அப்பிராந்தியத்தில் அதன் நடவடிக்கைகளுக்கோ நிதியளிக்கும் உலகளாவிய நிதி நிறுவனங்களையும் குறிவைக்கக்கூடும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக, கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்றியமையாதவையாக உள்ளன, மேலும் அவையும் சாத்தியமான இலக்குகளில் ஒன்றாக இருக்கலாம் என்று ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹர்முஸ் நீரிணை நெருக்கடி

உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயுப் போக்குவரத்திற்கான முக்கிய கப்பல் வழித்தடமான ஹர்முஸ் நீரிணையை ஈரான் பகுதியளவு மூடியதால், உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலருக்கும் மேல் உயர்ந்துள்ளது.

இந்த வழித்தடம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது என்றும், மற்ற நாடுகளின் கப்பல்கள் குறைந்த அளவில் இதன் வழியாகச் செல்கின்றன என்றும் ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

பகுப்பாய்வாளர்களின் கூற்றுப்படி, அமெரிக்கா ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் பதிலடி கொடுக்கும் விதமாக அப்பிராந்தியம் முழுவதும் எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தாக்கக்கூடும்.

இது மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )