எல்ல பஸ் விபத்துக்கு காரணம் என்ன?

எல்ல பேருந்து விபத்தின் போது பேருந்திலிருந்த சாரதியின் உதவியாளர், விபத்து குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ”நான் எனது சகோதரருடன் உதவியாளராக வந்தேன்.
வழியில், வேகக் கட்டுப்பாடு தடையாளி (Brake) இயங்கவில்லை என்று அவர் கூறினார். நான் கீழே சென்றேன், அனைவரையும் கீழே இறங்கி இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என கூறினேன்.
எனக்கும் அதிகம் நினைவில் இல்லை. பேருந்து பலத்த சத்தத்துடன் இரண்டு முறை பாதுகாப்பு வேலியில் மோதி பள்ளத்தில் வீழ்ந்தது.
மக்கள் பேசும் சத்தம் கேட்டு நான் விழித்தேன். வேக கட்டுப்பாடு தடையாளி (Brake) இயங்காததால் பேருந்தை நிறுத்த முடியவில்லை.” என சாரதியின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.