இலங்கையின் எரிசக்தி துறையில் கவனம் செலுத்தியுள்ளோம் – ​​பதில் அமெரிக்க தூதர் அறிவிப்பு

இலங்கையின் எரிசக்தி துறையில் கவனம் செலுத்தியுள்ளோம் – ​​பதில் அமெரிக்க தூதர் அறிவிப்பு

இலங்கையின் எரிசக்தி துறையில் நிகழும் நேர்மறையான மாற்றங்களில் தனது நாடு கவனம் செலுத்தியுள்ளதாக ​​பதில் அமெரிக்க தூதர் ஜெய்ன் ஹோவெல் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி துறை உறவுகளை மேலும் மேம்படுத்த விரும்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, ​​நாட்டில் எரிசக்தி மற்றும் மின் துறைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து எரிசக்தி அமைச்சர் விரிவாகப் பேசியிருந்தார்.

அத்துடன், அமெரிக்க முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் துறைகள் மற்றும் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

மின் மறுசீரமைப்பு திட்டம், பெட்ரோலியத் துறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள் மற்றும் நாட்டிலும் பிராந்தியத்திலும் எரிசக்தி ஸ்திரத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இதன் போது விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க தூதரகத்தின் பொருளாதார விவகார அதிகாரி ஜேக்கப் தாமஸ் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )