நீர் கட்டணங்கள் திருத்தப்படாது – அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவிப்பு

நீர் கட்டணங்கள் திருத்தப்படாது – அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தத்திற்கு இணையாக நீர் கட்டண திருத்தம் செய்யப்படாது என்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்போது (மே 23) நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக போசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படுவது போலவே நீர்க் கட்டணங்களும் திருத்தப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நீர் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என்று கூறியதாக எதிர்க்கட்சி தலைவரை நோக்கிய கேள்வியெழுப்பினார்.

தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் என்று அறிவிப்பதற்கு முன்னர் மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து தனது கட்சி கூறியது போலவே, நீர்க் கட்டண திருத்தம் தொடர்பாக கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

Share This