கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ( 05) முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அளவைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள நீர்வெட்டு நேரம் நாளை முதல் தினசரி 08 முதல் 12 மணித்தியாலங்களால் குறைக்கப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை எந்தவொரு பிரதேசத்திலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )