எச்சரிக்கை….உங்கள் கையடக்கத் தொலைபேசி வெடிக்க வாய்ப்புண்டு

எச்சரிக்கை….உங்கள் கையடக்கத் தொலைபேசி வெடிக்க வாய்ப்புண்டு

தற்போதைய நவீன காலத்தில் ஸமார்ட்போன் பயன்படுத்தாதவர்களை நம்மால் காணவே இயலாது.

என்னதான் தொலைபேசிகள் நமது வேலைகளை இலகுபடுத்தினாலும் அவற்றினால் பல ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அந்த வகையில் சில நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறி அதனால் பல ஆபத்துக்கள் ஏற்படுவதை நம்மால் காண இயலும்.

அந்த வகையில் தொலைபேசி வெடிப்பதற்கு முதல் காரணம் அதிக வெப்பம்.

தொடர்ந்து தொலைபேசியில் பணிகள் செய்து வரும்பட்சத்தில் அவை அதிக சூடாகும். அதுமட்டுமின்றி அதிக வெயில் நேரங்களில் செல்போனை சூரிய ஒளியில் வைப்பது, அதிக நேரம் சார்ஜ் செய்வது போன்றவற்றாலும் தொலைபேசியின் பெட்டரி அதிக சூடாகி வெடிப்புக்கு வழிவகுக்கும்.

இவற்றை தடுப்பதற்கான சில வழிகள்

  • தொலைபேசிக்கு அதிக வேலை கொடுக்காமல் சிறிது நேரம் நிறுத்தி வைக்க வேண்டும்.
  • சார்ஜ் செய்துகொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஒரிஜினல் சார்ஜர் மற்றும் கேபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • அதிகம் சூடான இடங்களில் தொலைபேசியை வைக்க வேண்டாம்.
  • சேதமான பெட்டரிகளை உடனடியாக நீக்கவும்.
Share This