
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களுக்கு எச்சரிக்கை
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக, கடந்த வருடங்களில் கைதானவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாக காணப்படுவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், 41,000 இற்கும் மேற்பட்டோர் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.
பிராந்திய அளவில், லண்டனில் 2,100 பேரும், , மேற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் 1,100 பேரும், வேல்ஸில் 649 பேரும் வடக்கு அயர்லாந்தில் 234 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வேலை செய்வதற்கு எங்கும் இடமில்லை. கடுமையான நடவடிக்கைகள் ஊடாக எல்லைகளில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மீட்டெடுக்க உள்துறை அலுவலகம் பணியாற்றும் என அதன் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
