“மை டிவிகே”உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் விஜய்

“மை டிவிகே”உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் விஜய்

புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை சந்திக்க தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக இறங்கி உள்ளது.

அந்த கட்சி சார்பில் ‘மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார்.

சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் செயலியை அறிமுகம் செய்துள்ளார். செயலியை தொடங்கி வைத்தப்பின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பரப்புரை முன்னெடுப்பையும் விஜய் இன்று தொடங்கிறார். குடும்பம் குடும்பமாக பொதுமக்களை தவெகவின் உறுப்பினர்களாக இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு என திமுக உறுப்பினர் சேர்க்கை நடத்தும் நிலையில் தவெகவும் உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This