
ஓய்வை அறிவித்தார் உஸ்மான் கவாஜா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்மாகும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கை முழுவதும் சக அவுஸ்திரேலிய வீரர்களிடமிருந்து வித்தியாசமாக நடத்தப்பட்டதாக கூறிய அவர் இதனால் தான் ஏமாற்றமடைந்ததாகவும், வேதனையடைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரிக்கி பொண்டிங் ஓய்வு பெற்ற பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்ட கவாஜா, 2011 இல் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய அதே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார்.
“நான் பாகிஸ்தானைச் சேர்ந்த பெருமைமிக்க இஸ்லாமியர்.
அவுஸ்திரேலியாவுக்காக ஒருபோதும் விளையாட மாட்ட முடியாது என சிலர் என்னிடம் கூறினார்கள். ஆனால் அந்த கருத்தை என்னால் மாற்ற முடிந்தது.
“நான் எப்போதும் கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்திருக்கிறேன், நான் ஒரு வெள்ளையர் அல்லாத வீரர்.
என் கருத்துப்படி, அவுஸ்திரேலியா சிறந்த அணி. ஆனால் நான் பல இடங்களில் வித்தியாசமாக உணர்ந்திருக்கிறேன்.
நான் நடத்தப்பட்ட விதம் வேறுபட்டது என உஸ்மான் கவாஜா தனது ஓய்வு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு முதுகுவலி இருந்தது, அதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் என்னை விமர்சித்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
39 வயதானஉஸ்மான் கவாஜா 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,206 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதில் 16 சதங்கள் மற்றும் 28 அரைச் சதங்கள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
