வெனிசுலா எண்ணெய் வளத்தை கைப்பற்றியது அமெரிக்கா!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

வெனிசுலா எண்ணெய் வளத்தை கைப்பற்றியது அமெரிக்கா!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க சந்தைக்கு 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி நேற்று (06) இரவு தனது Truth Social கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு அனுமதிக்கப்பட்ட கச்சா எண்ணெயை வெனிசுலா இடைக்கால அரசாங்க அதிகாரிகள் வழங்குவார்கள் என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த எண்ணெய் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் என்றும், அது வெனிசுலா மக்களுக்கும் அமெரிக்காவிற்கும் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் சேமிப்புக் கப்பல்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள கொள்கலன் துறைமுகங்களுக்கு நேரடியாகக் கொண்டு வரப்பட உள்ளன.

வெளிநாட்டு ஊடகங்களிடம் பேசிய மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர், இந்த கச்சா எண்ணெய் ஏற்கனவே பீப்பாய்களில் நிரப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவை தற்போது கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ளதாகவம், அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.

இருப்பினும், 30-50 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் என்பது ஒரு பெரிய தொகையாகத் தோன்றினாலும், கடந்த மாதத்தில் அமெரிக்கா ஒரு நாளைக்கு 20 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெயைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, எரிபொருள் விலைகளில் இந்த எண்ணெய் வெளியீட்டின் தாக்கம் குறைவாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டிரம்பின் அறிக்கை வெளியான பின்னர், அமெரிக்க எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு ஒரு டொலர் அல்லது கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்து 56 டொலராக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலாவின் ஒரு பீப்பாய் எண்ணெய் தற்போது 55 டொலர் மதிப்புடையது என்றும், 50 மில்லியன் பீப்பாய்கள் விற்கப்பட்டால், 1.65 முதல் 2.75 பில்லியன் டொலர் வரை வருவாய் ஈட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், இவ்வளவு பெரிய அளவிலான எண்ணெய் விநியோகம் வெனிசுலாவின் சொந்த எண்ணெய் இருப்புக்களைக் குறைக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )