அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல்!

அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல்!

வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் கொண்டுச் செல்லும் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

அமெரிக்க துருப்புக்கள் ஹெலிகாப்டர் ஒன்றின் ஊடாக கப்பலின் தளத்தில் தரையிறங்கி, கப்பலின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து கப்பலை கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த நடவடிக்கைக்காக அமெரிக்க துருப்புக்களைப் பாராட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வின் போது, ​​டிரம்ப், “வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் கப்பல் ஒன்றை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

இதுவரை கைப்பற்றியதில் இதுவே மிகப்பெரிய கப்பல் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், டேங்கர் கப்பலின் உரிமையாளர் யார் என்பதைச் சொல்ல டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். கப்பலின் எண்ணெய் பற்றி கேட்டபோது, ​​”அது எங்களுக்குச் சொந்தமானது என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

டிரம்பின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பின்னர், வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து வரும் எண்ணெய் கப்பல் ஒன்றை கைப்பற்றுவதற்கான ஆணையை நிறைவேற்றியதாக அரசாங்கம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (உள்ளூர் நேரம்), மத்திய புலனாய்வுப் பிரிவு, உள்நாட்டுப் பாதுகாப்பு புலனாய்வுகள் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படை ஆகியவை பாதுகாப்புத் துறையுடன் இணைந்து, வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை கைப்பற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் சட்டவிரோத எண்ணெய் கப்பல் வலையமைப்பில் ஈடுபட்டதற்காக, பல ஆண்டுகளாக, இந்த எண்ணெய் டேங்கர் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டது.

வெனிசுலா கடற்கரையில் அமெரிக்கப் படைகளால் இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது. தடைசெய்யப்பட்ட கப்பலின் போக்குவரத்தை நிறுத்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )