அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் எண்டனி பிளிங்கன் இந்த வார இறுதியில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி நாளை அவர் தென்கொரிய தலைநகர் சியோலுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் வோஷிங்டன்-சியோல் உறவுகளின் ஸ்திரத்தன்மை குறித்து கவனம் செலுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோக்கியோ மற்றும் பாரிஸ் செல்லவுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக எண்டனி பிளிங்கனின் இறுதி வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.