அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் கொழும்பில் புதிய கிளையை திறந்தது

இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது.
அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் போர்க்ஸ் (தனியார்) லிமிடெட் மேலும் இவற்றின் துணை நிறுவனங்கள் 2024 மார்ச் மாதத்தில் தயாரிப்பு விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
1880 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள் நிறுவனம் 1961ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்டது.
அதன் பின்னர் குறித்த நிறுவனம் ஆசியாவில் தமது செயற்பாடுகளை இலங்கையிலிருந்து அகற்றி சிங்கப்பூரில் ஆரம்பித்து இன்று சிங்கப்பூரில் மாபெரும் நிறுவனமாக மாறியுள்ளது.
ஷெல் எரிபொளுள் நிரப்பு நிலைய திறப்பு விழாவில் பங்கெடுத்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜூலி சுங் கூறியுள்ளதாவது,
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட RM Parks’ Shell எரிபொருள் நிலையத்தை இலங்கையில் 150 நிலையங்கள் திட்டமிடப்பட்டதில் திறப்பதில் பெருமை கொள்கிறோம்.
இந்த முதலீடு நம்பகமான எரிபொருள் வழங்குநரைச் சந்தைக்குச் சேர்ப்பதுடன் அமெரிக்காவையும் இலங்கையையும் மேலும் செழுமையாக்குகிறது.
எரிபொருள் வழங்குனர்களை பல்வகைப்படுத்துவது இலங்கையின் 2022 எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்திய எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவும் – என்றார்.