
கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்கா தாக்குதல் – எட்டுப் பேர் பலி
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கப்பல்கள் மீதான புதிய தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவ தெற்கு கட்டளை, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தின் வழிகாட்டுதலின் பேரில், திங்களன்று சர்வதேச கடற்பரப்பில் மூன்று கப்பல்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கொல்லப்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்
TAGS usa
