19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணம் – முதல் போட்டியிலேயே இலங்கை அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணம் – முதல் போட்டியிலேயே இலங்கை அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 139 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மலேசிய அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்திருந்தது.

இலங்கை அணி சார்பில் தஹமி செனெத்மா 55 ஓட்டங்களையும், சஞ்சனா கவிந்தி 30 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

பந்து வீச்சில் நஸ்வா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா மகளிர் அணி 14.1 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இந்தது.

தொடக்க ஆட்டக்காரர் நூர் அலியா அதிகபட்சமாக ஏழு ஓட்டங்களை குவித்திருந்தார். ஐந்து பேர் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

மேலும், எந்தவொரு துடுப்பாட்ட வீராங்கனையும் இரட்டை இலக்க ஓட்டங்களை குவிக்கவில்லை.

இலங்கை அணி சார்பில் சாமோதி பிரபோதா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக தஹமி செனெத்மா தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

 

 

 

Share This