ட்ரம்பின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலும் , ஹமாஸும் அமைதியை முன்னெடுக்கும் வகையில், தங்கள் இரண்டு ஆண்டுகால போரை நிறுத்தி, ஒப்பந்தத்தை அங்கீகரித்தன.
இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபை வாக்களித்துள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட 13 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
எவரும் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்கவில்லை.
ஆனால், இந்த தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஹமாஸ்,
“பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது” என்றும், காஸா மீது சர்வதேச அறங்காவலர் பதவியை திணிக்க முயற்சிக்கிறது என்றும் கூறியது.
ஆனால், ஹமாஸின் இந்த முடிவை பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.
மறுபுறம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வாக்கெடுப்பை வரவேற்ற ட்ரம்ப், தனது சமூக ஊடக தளத்தில் ஒரு நீண்ட செய்தியை வெளியிட்டார்.
இந்த முடிவை உலகளாவிய ராஜதந்திரத்திற்கான ஒரு மைல்கல் என்று வர்ணித்த அவர், இந்த நடவடிக்கையை ஆதரித்த நாடுகளைப் பாராட்டினார். அதேநேரத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசை நிராகரிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
